சர்ச்சையில் சிக்கிய ஜீவா..! அப்படி என்ன சொன்னார் தெரியுமா ? 

 

தேனியில் உள்ள ஒரு ஜவுளி கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகர் ஜீவா அங்கு குறித்த கடையை திறந்து வைத்துவிட்டு அங்குள்ள ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதன் போது அங்கு வந்த செய்தியாளர்கள் நடிகர் ஜீவாவிடம் கேரளாவில் பூதாகரமாகி உள்ள  நடிகைகளின் புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு 'அது எனக்கு தெரியாது' என்பதைப் போன்ற பதிலை ஜீவா சொல்லி உள்ளார்' எல்லா துறைகளிலுமே இது போன்ற புகார்கள் இருக்கின்றது என்றும் இதற்கு பதில் சொல்லவில்லை என்றும் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி  குறித்து ஒரு கேள்வியை கேட்டதாக செய்தியாளர் சொன்னதற்கு எழுந்து சென்ற ஜீவா மீண்டும் திரும்பி வந்து கேள்வி கேட்ட  செய்தியாளர்களிடம் 'உனக்கு அறிவு இருக்கா?' என ஒருமையில் பேசியுள்ளார்.

இதன் காரணமாக அந்த இடத்தில் கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் ஜீவாவை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.