ஜான்வி கபூரை தமிழுக்கு அழைத்து வரும் கமல்ஹாசன்..!!

இந்தி சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூரை விரைவில் தமிழில் அறிமுகப்படுத்த கமல்ஹாசன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
 

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் பிஸியாகிவிட்டார். அவருடைய ராஜ்கமல் ஃப்லிம்ஸ் நிறுவனம் வரிசையாக பல்வேறு படங்களை தயாரித்து வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு படங்களை தயாரிக்கும் கமல்ஹாசன், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இதில் லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா ஏற்கனவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனினும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க இந்தி சினிமா நடிகை ஜான்வி கபூரை ஒப்பந்தம் செய்ய படக்குழு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

தற்போது ஜான்வி இந்தி சினிமா மட்டுமின்றி தெலுங்குப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் அவரை தமிழ் படத்திலும் நடிக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.