அரசியலில் களம் இறங்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?

 

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் சட்டப்பேரவையில் தனது மனைவியைப் பற்றி தகாத முறையில் விமர்சித்தார்கள் என்று கூறி கதறி அழுதது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது உறவினரான பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசியல்வாதிகள் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடுவதை விடுத்து பொதுப்பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் குடும்ப பெண்களுக்கு எதிரான கருத்துகள் பேசுவது அராஜக ஆட்சி நடக்கிறது என்பதை காட்டுகிறது” என்று கண்டித்துள்ளார்.


ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக உள்ளார். அவரை அரசியல் ரீதியாக சந்திரபாபு நாயுடுவால் வீழ்த்த முடியவில்லை. எனவே ஜெகன்மோகன் ரெட்டி வளர்ச்சியை தடுக்க ஜூனியர் என்.டி.ஆரை அரசியலில் களம் இறக்க இருப்பதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

1995-ல் என்.டி.ராமாராவிடம் இருந்து தெலுங்குதேசத்தை சந்திரபாபு நாயுடு கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.