ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவக்கம்..!!

தெலுங்கில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பை கிளாப் அடித்து இயக்குநர் ராஜமவுலி துவக்கி வைத்தார்.
 

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர், கொரடலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இது அவருடைய முதல் நேரடித் தெலுங்குப் படமாகும்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.