ஜஸ்ட் மிஸ்..! சாவில் இருந்து தப்பிச்சிருக்கேன்! ஷாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!

 

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரஷ்மிகா மந்தனா. அதனால் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா விமானம் மூலம் கிளம்பியிருக்கிறார்.

ரஷ்மிகா தற்போது அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது எடுக்கப்படுகிறது. சுகுமார் இயக்கி வரும் அந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அனிமல். சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கிய அனிமல் படத்தில் ரன்பிர் கபூரின் மனைவியாக நடித்திருந்தார் ரஷ்மிகா. அந்த படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியது, வரவேற்பும் கிடைத்தது. எதிர்ப்பு எல்லாம் அனிமல் படத்தின் வசூலை பாதிக்கவில்லை. அனிமல் படம் உலக அளவில் ரூ. 900 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ரன்பிர் கபூர், ரஷ்மிகாவின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது அனிமல்.அந்த விமானத்தில் ரஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாஸும் பயணம் செய்தார். இதையடுத்து ஷ்ரத்தா தாஸுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு, இப்படித் தான் இன்று சாவில் இருந்து நாங்கள் தப்பித்தோம் என தெரிவித்துள்ளார் ரஷ்மிகா.

அவரின் இன்ஸ்டா ஸ்டோரீஸை பார்த்த ரசிகர்கள் பதறிவிட்டார்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே. நல்ல வேளை விமானம் பத்திரமாக தரையிறங்கியிருக்கிறது. சாவில் இருந்து தப்பித்தபோதிலும் அந்த டென்ஷனை முகத்தில் காட்டாமல் இப்படி சிரித்தபடி புகைப்படம் எடுக்க தனி தைரியம் வேண்டும். இப்படியே இருங்கள் என தெரிவித்துள்ளனர்.