கர்ப்பமாக இருக்கும் கபாலி பட நடிகை...! குவியும் வாழ்த்துக்கள்..! 

 

தமிழில் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே.அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினியின் கபாலி தான். பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்திய சினிமாவில் மட்டுமே பயணித்து வந்த ராதிகா ஆப்தேவிற்கு ஹாலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

நடிகை ராதிகா ஆப்தே தற்போது கர்ப்பமாக இருக்கிறார். லண்டன் பிலிம் பெஸ்டிவலில் நடிகை ராதிகா ஆப்தே கலந்துகொண்ட போது தான், இவர் கர்ப்பமாக இருக்கிறார் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.