கபாலி திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு..!

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. மலேசிய கேங்ஸ்டராக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

 கபாலி திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளாவில் ரூ. 15.5 கோடி, கர்நாடகாவில் ரூ. 34 கோடி, ஆந்திரா - தெலுங்கானாவில் ரூ. 39 கோடி மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற இடங்களில் ரூ. 42 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் ரூ. 108 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் மொத்தமாக கபாலி திரைப்படம் உலகளவில் ரூ. 313.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கூறுகின்றனர். இதுவே கபாலி படத்தின் ஒட்டுமொத்த வசூல் என சொல்லப்படுகிறது.