படத்தின் டிரைலரிலே சாதனையை படைத்த ‘கைதி‘..!!

 

நடிகர் கார்த்தி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கைதி‘. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இப்படம் ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது. இந்நிலையில் ‘கைதி‘ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன். ஹிந்திக்காக  இப்படத்தில் நிறைய மாற்றங்களைக் செய்துள்ளார். இப்படத்தில் இருந்த நரேன் கதாபாத்திரத்தை ஹிந்தியில் பெண் கதாபாத்திரமாக மாற்றி அதில் தபு நடித்துள்ளார்.

தமிழில் கார்த்திக்கு மனைவி கதாபாத்திரம் கிடையாது. ஹிந்தியில் மனைவி கதாபாத்திரத்தை வைத்து, அதில் அமலா பால் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலருக்கு 47 மில்லியன் பார்வைகள் என பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் ‘கைதி‘ படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை விடவும் ஹிந்தி ‘போலா‘ க்கு கிடைக்குமா என இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.