சிம்பு படத்தில் கமல்ஹாசன்..!! இது வேற மாறி இருக்கும்.!!

சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுதொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மாநாடு, வெந்து தணிந்தது காடு பட வெற்றிகளுக்கு பிறகு நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இதையடுத்து தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் மிகவும் கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இது நடிகர் சிம்புவின் 48-வது படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

ஆனால் அது கவுரவ வேடமா? அல்லது முழு நீள கதாபாத்திரமா? என்பது தெரியவில்லை. எனினும், அவர் தேசிங்கு பெரியசாமி - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிப்பது உறுதி என்று கூறுகின்றனர். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். அடுத்ததாக மணிரத்னம், ஹெச். வினோத் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.

அதை தொடர்ந்து பா. ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடைய படங்களிலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மேலும் பட தயாரிப்பு பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். சிம்பு நடிக்கும் படம் மட்டுமில்லாமல், சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிக்கும் மற்றொரு படத்தையும் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.