இன்று முதல் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் ஆரம்பம்..!

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘விக்ரம்’. தென் தமிழ்நாட்டுப் பகுதியை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கமல் பார்வையற்றவராக நடிப்பதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டே இந்த படத்தை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் அது முடியாமல் போனது. மேலும் இந்தாண்டு கொரோனா இரண்டாவது அலை துவங்கியதால், மேலும் படத்தின் தயாரிப்பு பணிகள் தாமதமாகின.

இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில் ஒப்பந்தமானார். அவரை தொடர்ந்து இரண்டு மாதத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி தேர்வானார். திரைக்கதைக்கான மொத்த வேலையும் முடிந்ததால் விரைவில் படக்குழு ஷூட்டிங் போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.