கன்னிகா தொடங்கிய புது பிசினஸ்... யாருக்கு போட்டி தெரியுமா?

 

திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பை கைவிடாமல் தொடர்ச்சியாக நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் என்று கொடுத்து நல்ல வரவேற்பையும் பெற்றார் அதனால் இனி எப்படி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்தாரோ அதேபோன்று ஹிந்தியில் ஒரு ரவுண்டு வருவார் என்பது சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சும் உள்ளது.  எப்படி நயன்தாரா தனது குடும்ப வாழ்க்கையிலும் சினிமாவிலும் பிஸியாக இருக்கிறாரோ அதற்கேற்ற வகையில் பிசினஸிலும் தற்போது படு பிஸியாக இருக்கிறார். கடந்த வருட தொடக்கத்தில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்தும் தனித்தனியாகவும் பல தொழில்களில் தங்களது முதலீட்டை செலுத்தி வருகின்றனர். 

 

அதன்படி முதலில் நயன் ஸ்கின் என்ற அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு தொழிலையும் லிப்பாம் வணிகத்தையும் தொடங்கினார் நயன்தாரா! இந்த இரண்டிற்கும் நயன்தாராவின் விளம்பரதாரராக மாறி தற்போது இந்த இரண்டு வணிபமும் படு ஜோராக நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆரோக்கியமாக இயற்கையாகவே விளைவிக்கப்படும் உணவு ஒன்றிலும் தற்போது நயன்தாரா முதலீடு செய்திருப்பது நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட ஃபெமி நயன் என்கின்ற சானிடரி நாப்கின் பிராண்ட் தொழிலையும் தொடங்கினார், சினிமா வட்டாரத்தை பொருத்தவரையில் சினிமாவில் எப்படி முன்னணி நடிகை நடிகர்கள் நடித்து வருமானம் ஈட்டுகிறார்களோ அதற்கு ஏற்ற வகையில் தனது வருமானத்தை மற்ற தொழில்களிலும் முதலீடு செய்து பெருக்க வருகிறார்கள் அதில் தற்போது பல வித்தியாசமான தொழில்களை தொடங்கி வியாபாரத்திலும் தனது வெற்றியை கண்டு வரும் நயன்தாராவிற்கு போட்டியாக பிரபல மற்றும் முன்னணி பாடல் ஆசிரியரான சினேகன் மனைவி ஒரு புதிய பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 

அதாவது தமிழ் திரை உலகில் 25 ஆண்டுகளாக முன்னணி பாடல் ஆசிரியராகவும் ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதி நல்ல வரவேற்பையும் வெற்றியும் கண்டவரும், சினேகன் சமீபத்தில் தான் காதலித்த நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இருவரும் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் சினேகன் தனது மனைவி தொடங்கி இருக்கும் ஒரு பிசினஸ் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது, என் இணையாள் தொடங்கும் இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அன்பையும்,ஆதரவையும் தாருங்கள் என்று ஸ்நேஹம் மூலிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு இயற்கையான முடி பராமரிப்பு தீர்வுகளுக்கான உங்கள் செல்ல வேண்டிய இடமாகும்! செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக மருத்துவரீதியில் பரிசோதிக்கப்பட்ட எங்களின் முதன்மை தயாரிப்பு - ஸ்நேஹம் ஹெர்பல் ஹேர் ஆயில் மூலம் ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலுக்கு வணக்கம் சொல்லுங்கள். உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தை மாற்றி நல்ல அடர்த்தியான வளர்ச்சியை பெறுங்கள் என்ற வகையில் கூந்தல் எண்ணெய் விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் நயன்தாரா மற்றும் சினேகன் இருவருக்கும் இடையேயான வாணிப போட்டியானது முற்றும் என சினிமா வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.