கார்த்தியின் ஜப்பான் பட வெளியீட்டு தேதி இதுதான்..!!

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

கார்த்தி மற்றும் அனு இம்மானுவேல் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜப்பான். இந்த படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு இணைந்து தயாரித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் ஜப்பான் படத்துக்கும் ரவி வர்மன் தான் ஒளிப்பதிவாளர். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்துள்ளன.

இதையடுத்து படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களில் ரிலீஸ் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த படம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜப்பான் படம் கார்த்தி நடிக்கும் 25-வது படமாகும். சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிடோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் இந்த படத்தில் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.