சீதை வேடத்தில் நடிக்க நான் பட்ட கஷ்டம்: பட்டியலிட்ட கீர்த்தி..!!

ஆதிபுருஷ் படத்தில் சீதை வேடத்தில் நடிப்பதற்கு நடிகை கீர்த்தி சனோன் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார். அதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.
 

இந்தியளவில் பிரதான இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். இதை மையமாக வைத்து பல படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நவீன காலக்கட்டத்துக்கு ஏற்ப ராமயாணம் கதை படமாக்கப்பட்டுள்ளது.

ஆதிபுருஷ் என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். கதையின் பிரதான எதிர்மறை பாத்திரமான ராவணன் கதாபாத்திரத்தில் சையிஃப் அலி கான் நடித்துள்ளார்.

இந்தியாவில் பல தரப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டும் வரும் 16-ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் சீதையாக நடித்துள்ள கீர்த்தி சனோன், தனது அனுபவங்களிடம் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார்.

ராமாயணம் சார்ந்த கதையில் நடிப்பதால் அசைவம் உண்ணவில்லை. அதேபோன்று மார்டன் ஆடைகள் எதுவும் 
அணியாமல் புடவை மட்டுமே உடுத்திக்கொண்டேன். தீபிகா படுகோன், ஆலியா பட் போன்றோருடைய போட்டிக்கு மத்தியில் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. 

என் வாழ்நாளில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நான் நடித்ததுள்ளதை நினைத்து பெருமைக் கொள்வோன். இந்த படத்தில் சீதையாக என்னை நிலை நிறுத்திக்கொள்ள நான் மிகவும் முயன்றுள்ளேன் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார் கீர்த்தி சனோன்.