அடுத்ததாக விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, தற்போது தமிழிலும் வரிசையாக படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். கஸ்டடிக்கு பிறகு விஷால், விஜய் படங்களில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தமிழில் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் ஹிட்டாகவில்லை. இதனால் அவருக்கு உடனடியாக ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார்.

வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் இந்த படத்துக்கு பிறகு விஷால், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த கூட்டணி ‘கதகளி’ என்கிற படத்தில் இணைந்துள்ளனர். ஆனால் அந்த படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை. இதையடுத்து மீண்டும் இக்கூட்டணி இணகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’. ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடவில்லை. இதனால் அவரும் உடனடியாக ஒரு ஹிட்டை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதையடுத்து தான் அவர் விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் திருச்சியில் துவங்குகிறது. கதாநாயகியாக நடிப்பதற்கு கீர்த்த் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கஸ்டடி’ படத்துக்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.