மோகன் லாலுடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்..!
2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அவர்கள் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது அழகாலும், திறமையான கதாநாயகியாக ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். இவர் ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். படத்தில் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள்.
இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கினார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவத்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மேலும், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. வைஜெயந்தி மூவிசின் தயாரிப்பில் வெளியானது. இந்த படத்தில் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது.
தமிழ் போலவே அம்மணிக்கு மலையாளத்திலும் ஏகப்பட்ட பிரபலம் இருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் மாபெரும் நடிகர்களில் ஒருவரான மோகன் லால் தனது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் சிறு வயதில் மோகன் லாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.