கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரைலர் ரிலீஸ்..!

 

 நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கதையின் நாயகியாக நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி, சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் நடித்து மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார் .

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது அந்த படத்தின் டிரைலர் படக் குழு வெளியிட்டுள்ளது.

ரகு தாத்தா திரைப்படத்தை இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார்.இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

ஹிந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

அதிலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் பேசிய பொண்ணா அடக்கமா - லாம் இருக்க முடியாது என்ற வசனம் மேலும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

<a href=https://youtube.com/embed/-DJEwfrEK9M?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-DJEwfrEK9M/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">