பிரதமர் மோடியை சந்தித்த கேஜிஎப் மற்றும் காந்தாரா பட ஹீரோக்கள்..!!
Feb 14, 2023, 06:05 IST
பெங்களூரில் நேற்று நடைபெற்ற 14-வது சர்வதேச விமானக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனி விமானத்தில் கர்நாடகம் வருகை தந்தார். அவரை பெங்களூரு விமான நிலையில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஆளுநர் மாளிகையில் தங்கி பிரதமர் ஓய்வெடுத்தார்.
இதனிடையே கர்நாடகம் வருகை தந்த பிரதமர் மோடியை, கேஜிஎப் பட நாயகன் யஷ், காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோர் நேரில் சென்று நேற்று சந்தித்தனர். அப்போது, தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தங்கள் பணியின் மூலம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்திற்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் தென்னிந்தியத் திரையுலகம் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்ததையும் அவர் பாராட்டினார்.