முக்கிய அப்டேட் கொடுத்த குஷ்பு..!!

வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகை குஷ்பு, சிகிச்சை முடிந்ந்து வீடு திரும்பியுள்ளார்.
 

சினிமாவில் பிஸியாக நடித்து வரும் குஷ்பு, பா.ஜ.க கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். மேலும் சமீபத்தில் அவரை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் குஷ்பு தொழில்முறை தேவைக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் , அவருக்கு அடினோவைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தொடர் காய்ச்சல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.

இதுதொடர்பாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவர், தனக்கு அடினோவைரஸால் காய்ச்சல் வந்துள்ளதாகவும், தொண்டை வலி, சோம்பல் போன்ற பிரச்னைகளால் அவதி அடைந்துவருவதாகவும், எல்லோரும் உடல்நலனை தற்காத்துக்கொள்ளவும் என்று குஷ்பு தெரிவித்திருந்தார்.