ஓரே வீடியோவில் பத்துக்கும் மேற்பட்ட அப்டேட்டுகளை வாரி வழங்கிய படக்குழு..!!

கேரளா மற்றும் தமிழ்நாடு ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கிங் ஆஃப் கோதா படம் தொடர்பான பல்வேறு அப்டேட்டுகளை படக்குழுவினர் ஒரே வீடியோவில் வெளியிட்டு திரையுலகையே திக்குமுக்காட வைத்துள்ளனர்.
 
 

சீதா ராமம் வெற்றிக்கு பிறகு தென்னிந்திய சினிமாவே எதிர்பார்க்கும் நடிகராக மாறியுள்ளார் துல்கர் சல்மான். தற்போது அவர் நடித்து வரும் புதிய படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். 

மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்த படத்துக்கு பெரிதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள், படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட விபரங்களை படக்குழு ஒரே வீடியோவில் வெளியிட்டு திரையுலகையே ஆச்சரியமடையச் செய்துள்ளது.

அதன்படி துல்கார் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும்  இப்படத்தின் டீசர் ஜூன் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மலையாளம், தமிழில் நேரடியாக வெளியாகும் இந்த படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.