குமாரின் சூழ்ச்சி வலை : வீட்டை விட்டு போக முடிவு செய்த அரசி..! 

 

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் பங்ஷன் சிறப்பாக நடக்க ராஜியை அனைவரும் டான்ஸ் ஆட சொல்கின்றனர். அவளும் ஆட, கதிரும் சேர்ந்து ஆட ஆரம்பிக்கின்றனர்.

அதன்பின்னர் செந்தில் - மீனா ஆட ஆரம்பிக்க, சரவணன் - மயிலை ஆட சொல்கின்றனர். மனைவி மீது கடுப்பில் இருந்தாலும், அனைவரும் இருப்பதால் டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறான். பழனியும் தனியாக ஆட, சுகன்யா அவனை பார்த்து முறைக்கிறாள். மற்றொரு பக்கம் அவளுடைய நம்பருக்கு குமார் போன் போட்டு கொண்டே இருக்கிறான். அனைவரும் டான்ஸ் ஆட்டும் பிசியில் இருப்பதால், சுகன்யா வெளியில் வந்து அவனுடைய போனை அட்டென்ட் பண்ணி பேசுகிறாள்.

அப்போது குமார் என்ன ஆட்டம், பாட்டம்ன்னு சந்தோஷமா இருக்கீங்களா? எனக்கு இப்போ அரசிக்கிட்ட பேசனும் என சொல்கிறான். சுகன்யா இப்படி எப்படி? எல்லாரும் இருக்காங்க என சொல்ல, இப்போ நீங்க போனை கொடுங்க. இல்லன்னா நான் அங்க வருவேன். அரசிக்கிட்ட மட்டும் பேசுறதை, ஒட்டுமொத்த பேர் முன்னாடியும் பேசுவேன் என சொல்கிறான். இதனால் சுகன்யா ஷாக்காகி உள்ளே வருகிறாள்.

அந்த சமயத்தில் கரெக்டாக அரசி புடவை மாற்றுவதற்காக தனியாக ரூமுக்குள் வருகிறாள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சுகன்யா அங்கு வருகிறாள். குமார் உன்கிட்ட பேசணும் சொன்னான். நீ பேசு என சொல்லி போனை கொடுக்கிறாள். அவளும் வேற வழியில்லாமல் வாங்கி பேசி, இப்போ என்ன பண்ண சொல்ற? உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவா என கேட்கிறாள். அதற்கு அவன் அதெல்லாம் வேண்டாம். என்னை நேர்ல பார்த்து மன்னிப்பு கேளு போதும் என சொல்கிறான்.

அதனைக்கேட்டு ஷாக்காகும் அரசி, என்னால இப்போ வர முடியாது என சொல்கிறாள். அதற்கு குமார் அவளுக்கு கல்யாணம் முடிவாகியுள்ள மாப்பிள்ளை, அவன் வீட்டில் உள்ளவர்கள் நம்பரை எல்லாம் சொல்கிறான். இந்த கல்யாணம் நடக்கலன்னா உன் அப்பா அவ்வளவு தான் போய் சேர்ந்துருவாரு. நேர்ல வந்து மன்னிப்பு கேளு என சொல்லி போனை வைக்கிறான். சுகன்யாவும் அவளை போக சொல்ல, வீட்ல விஷயத்தை சொல்லிடவா என கேட்கிறாள்.

அதற்கு சுகன்யா, அப்பறம் பாண்டியன் அண்ணனுக்கு ஏதாவது ஆகிடும். கல்யாண வீடு, கருமாதி வீடாகனுமா என மிரட்டுகிறாள். இதனால் அரசி, குமாரை மீட் பண்ண முடிவு செய்கிறாள். வீட்டில் அனைவரும் இருப்பதால் கொல்லைப்பக்கம் வழியாக போ என சொல்லி அழைத்து வருகிறாள் சுகன்யா. அப்போது கோமதி அவளை நிப்பாட்டி, எங்கம்மா போற. சீக்கிரம் தூங்கு. அப்பத்தான் காலைல பிரெஸ்ஸா இருக்க முடியும் என சொல்கிறாள். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.