திட்டம் போட்ட குமாரு... குமாரின் பொய்யை சல்லி சல்லியாக நொறுக்கிய அரசி..!
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாடகத்தில் மாப்பிள்ளை, அவனுடைய அம்மா அப்பா எல்லாரும் வந்து அரசி ரெடி ஆகிட்டாலா என கேட்கின்றனர். அப்போது அங்கிருந்து ஒரு ஆள் பொண்ணு காணாமல் போயிருச்சு. இன்னும் எவ்வளவு நேரம் உண்மையை மறைக்க போறீங்க? என்கிறார். இதனால் மாப்பிள்ளை குடும்பத்தினர் கடுமையாக அதிர்ச்சி அடைகின்றனர். இவுங்க என்ன சொல்றாங்க பாண்டியா என கேட்கின்றனர்.
பாண்டியன் என்ன சொல்வது என தெரியாமல் தலை குனிந்து நிற்க, கோமதி கதறி அழுகிறாள். மாப்பிள்ளையின் அம்மா, அப்பா பொண்ணு எங்க என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அப்போது சரவணன் ஆவேசத்துடன் வெளியில் வருகிறான். பின்னாடி செந்தில், கதிர், பழனி மூவரும் வருகின்றனர். அந்த குமாரை தேடனும். அவன் எங்கன்னு கண்டுபிடிக்கணும். அப்போதான் அரசி எங்கன்னு தெரியும். அரசியை இங்க கூட்டிட்டு வந்து கல்யாணத்தை நடத்தனும் என சொல்கிறார்கள்.
இதனையடுத்து அவர்கள் கிளம்ப ரெடியாகும் போது, குமாரின் கார் வந்து நிற்கிறது. உடனே பழனி வேகமாக உள்ளே போய் குமார் வந்து விட்டதாக பாண்டியனிடம் சொல்கிறான். அப்போது மாப்பிள்ளையின் அம்மா யார் அந்த குமார்? என்ன விஷயம் என கேட்கிறாள். அதற்கு இந்தப்பக்கம் கதிர், செந்தில், சரவணன் மூவரும் குமாரை ரவுண்டு கட்டி அடித்து அரசி எங்கே என கேட்கிறார்கள். சத்தம் கேட்டு பாண்டியன் குடும்பம் அவசரமாக வெளியே வருகிறது.
இந்தப்பக்கம் சக்திவேல் வந்து என் பையன் மேல கை வைக்குறீங்களா என தடுக்கிறான். அவனிடம் அரசி எங்கே என எல்லாரும் கேட்க, உங்க வீட்டு பிள்ளை காணோம்ன்னு என் பையன் கிட்ட கேட்குறீங்க. இந்த ஓடுகாலி பெத்த பிள்ளை தான. எங்க ஓடி போய் இருக்காளோ என கண்டமேனிக்கு பேசுகிறான் சக்திவேல். அப்போது குமார் என்னை பேச விடுங்க நான் சொல்றேன் என்கிறான். நேத்து நலங்கு முடிஞ்சதுக்கு அப்பறம் அரசி எனக்கு போன் பண்ணி என்னை பார்க்கனும் சொன்னாள்.
அதுக்கப்புறம் என்னை வந்து பார்த்து கட்டிபிடிச்சு என்னைய கல்யாணம் பண்ணிகோங்கன்னு சொன்னாள் என்கிறான். இதனைக்கேட்டு கடுப்பாகி ராஜி அப்படியெல்லாம் பண்ணிருக்க மாட்டாள் என அனைவரும் சொல்கின்றனர். பாண்டியனும் என் பொண்ணு உன்னை தப்பா விரும்பிட்டா. அவ தப்பை உணர்ந்ததுக்கு அப்புறம் கல்யாணத்துக்கு இஷ்டப்பட்டு அமைதியா தான் இருந்தாள் என சொல்கிறான். அப்போது மாப்பிள்ளையின் அம்மா, இந்த விஷயம் தெரிஞ்சு தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்க.
கல்யாணத்துக்கு முந்துன நாள் வீட்டை விட்டு ஒடுனவள என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தியா? என் பையனுக்கு வேற பொண்ணு கிடைக்காதன்னு நினைச்சியா என சொல்லி ஷாக் கொடுக்கிறாள். அதனை தொடர்ந்து குமார், அரசிக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை. நைட்டு முழுக்க என்கூடத்தான் இருந்தாள் என பச்சையாக பொய் பேசுகிறான். அவளை அட்வைஸ் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன் என நடிப்பை போடுகிறான்.
அப்போது மீனா வாயை மூடுடா பொறுக்கி. நீ சொல்றதுலாம் உண்மைன்னா அரசி எங்க? என கேட்கிறாள். உடனே எல்லாரும் அரசி வந்து சொல்லட்டும். அப்பறம் நாங்க நம்புறோம் என்கிறார்கள். அதனை தொடர்ந்து காரில் இருந்து அரசியை கீழே இறக்குகிறான் குமார். அவள் அதிரடி ட்விஸ்ட்டாக தாலியை எடுத்து காட்டுகிறாள். இதனால் மொத்த பேரும் ஆடிப்போகின்றனர். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.