பெரும் வாய்ப்பை இழந்தது லாபடா லேடீஸ்!

 

உலக திரையுலகத்தில் வெளியாகும் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கர் விருது ஆண்டு தோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றது. அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் 97வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் லாபடா லேடிஸ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு நாடு முழுக்க 29 படங்களில் ஒரு படத்தை அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 29 திரைப்படங்களைப் பார்த்த இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி ஆஸ்கர் 2025-க்கு தகுதியான படங்களின் பெயர்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை. எனினும், சர்வதேச இணை தயாரிப்பில் வெளியான இந்தி மொழி திரைப்படமான சந்தோஷ் இடம்பெற்றுள்ளது.

அதாவது மொத்தமாக 85 படங்கள் ஆஸ்கர் விருதுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. அதில் இறுதி பட்டியலுக்காக 15 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவற்றுள் கிரண் ராவ் இயக்கிய லாபடா லேடிஸ் திரைப்படம் தற்போது நுழைவுப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

எனினும் 'சந்தோஷ்' என்ற ஒரு மற்றொரு இந்தி மொழி திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவுள்ளது. இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற 77 வது கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.