எங்கே போனாலும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த 3 பேரையும் அழைத்து செல்வாராம்..!

 

சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஹாங்காங் மற்றும் ஜப்பான் பயணம் சென்ற போது மூன்று பேர்களை கூடவே அழைத்துச் சென்றார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் மட்டுமின்றி உள்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தால் கூட அந்த மூன்று பேர் உடன் வருவார்கள் என்றும் அவர்கள் மூன்று பேரும் செவிலியர்கள் என்றும் கூறப்படுகிறது.



குழந்தைக்கு பிரயாணத்தின் போது அல்லது வெளிநாட்டில் தங்கி இருக்கும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்வதற்கு, குழந்தைகளின் தேவைகளை கவனிப்பதற்கு என்று மூன்று செவிலியர்களை அவர் நியமனம் செய்திருப்பதாகவும் அவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனால் தான் குழந்தை மீது இருக்கும் அக்கறையின் காரணமாகத்தான் நயன்தாரா எங்கு சென்றாலும் அந்த மூன்று செவிலியர்களை அழைத்து செல்வதாகவும் விமான நிலையத்தில் அவர் குழந்தைகளுடன் செல்லும் போது அவர் பின்னால் மூன்று செவிலியர்கள் செல்வதை பார்த்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.