ஒரே நேரத்தில் இரண்டு அம்மன் படங்களில் நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார்..!
Aug 6, 2024, 06:35 IST
நடிகை நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திலும் நயன்தாரா அம்மன் கேரக்டரில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நயன்தாரா இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் ராம நாராயணன் இயக்கிய ’ஆடி வெள்ளி’ திரைப்படத்தின் டைட்டிலில் இன்னொரு படத்தை அவரது மகன் முரளி ராமசாமி தயாரிக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தில் நயன்தாரா தான் அம்மன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
‘ஆடிவெள்ளி’ திரைப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டால் ஒரே நேரத்தில் இரண்டு அம்மன் படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.