‘லால் சலாம்’ படம் சூப்பர் ஹிட்... வெற்றி விழா கொண்டாடிய ஐஸ்வர்யா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

 

 ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் முதல் நாள் முதல் காட்சிகூட திரையரங்குகள் நிறைய வில்லை என்று கூறப்பட்டது. 

முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்தின் நெகட்டிவ் விமர்சனம் சமூக வலைதளங்களில் வெளியானது என்பதும் அதன் பிறகு முக்கிய ஊடகங்களில் இந்த படத்தின் விமர்சனம் வெளியான போது பல குறைகள் சுட்டிக் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக ரஜினியின் மொய்தீன் பாய் கேரக்டர் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் படத்தின் மற்ற கேரக்டர்கள் சரியாக அமைக்கப்பட்ட வில்லை என்றும் குழப்பமான திரைக்கதை, ஏ ஆர் ரகுமானின் சுமாரான இசை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய குறைகளாக சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனால் இந்த படம் இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே திரையரங்கில் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டது என்பதும் சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

‘ஜெயிலர்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ரஜினி அதற்கு அடுத்த படமே ரொம்ப சுமாரான ஒரு படத்தை கொடுத்தது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வழக்கமாக தமிழ் சினிமாவில் ஓடாத படங்களுக்கு சக்சஸ் மீட் நடத்தும் நிலையில் ’லால் சலாம்’ படத்திற்கும் சக்சஸ் மீட் நடத்தி உள்ளனர். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான் உட்பட பலரும் இந்த சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.