லால் சலாம் திரைப்படம் ஜக்குபாய் படக் கதையா..??

லால் சலாம் படத்தின் கதை 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஜக்குபாய் படத்தின் கதை என்கிற தகவல் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 
 

லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திர போஸ்டர் நேற்று வெளியானது. அதை தொடர்ந்து சமூகவலைதளம் முழுக்க அந்த போஸ்டர் தான் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக நடிக்கிறார்.

எனினும், இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். போட்டோஷாப் செய்தது போல இருப்பதாகவும், ரஜினியின் கெட்-அப் துளி கூட செட்டாகவில்லை. ஒரு ஃபேன் மேடு போஸ்டர் கூட சிறப்பாக இருக்கும், இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் காசை வீண் செய்வது ஏன்? என பல்வேறு விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த ‘ஜக்குபாய்’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இதே தலைப்பில் 2010-ம் ஆண்டு சரத்குமார், ஸ்ரேயா நடிப்பில் ஒரு படம் வந்துள்ளது. ஆனால் டைட்டில் தான் ஒன்றே தவிர, கதை வேறு என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இதுவரை ஒரேயொரு முறை மட்டும் தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். கடந்த 1979-ம் ஆண்டு வெளியான ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் ரஜினிகாந்த் கமாருதீன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவர் எந்த படத்திலும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக நடிக்கவில்லை.

அந்த படத்துக்கு இரண்டாவது முறையாக லால் சலாம் இயக்கும் படத்துக்காக தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்வராக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் கதை 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘ஜக்குபாய்’ படக் கதை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்போதே படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.