ரஜினிகாந்த் குறித்து பேசிய லதா ரஜினிகாந்த்..!

 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1990 முதலே அரசியலுக்கு வரவேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. கடந்த 2017-ல் ‘ஆன்மிக அரசியல்’ செய்வேன் என பேசியிருந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை என சொல்லி ரஜினி மக்கள் மன்ற அமைப்பை கலைத்தார்.

இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது கணவர் அரசியலுக்கு வராதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, \”அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான். ஏனெனில், அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. இருந்தாலும் அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்\” என கூறினார்.”,