சீரியல் நடிகர்கள் லதா ராவ் - ராஜ்கமல் வீட்டில் பகீர் கொள்ளை..!!
தொலைக்காட்சி பிரபலங்களான லதாராவ் மற்றும் ராஜ்கமல் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு சொந்தமாக மதுரவாயல் பகுதியில் ஒரு பங்களா வீடு உள்ளது. அதை சினிமா மற்றும் டிவி தொடர் படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்நிலையில் பூட்டிக் கிடந்த வீட்டை உடைத்து, பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக லதா ராவ் மற்றும் ராஜ் கமல் இருவரும் கொடுத்துள்ள புகாரில், வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி-க்கள் கொள்ளைபோய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து மதுரவாயல், கிருஷ்ணா நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த், விஜய் யேசுதாஸ், லதா ராவ் என பிரபலங்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.