லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு- கொதிப்பில் அஜித் ரசிகர்கள்..!!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கான காஷ்மீர் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீரில் தங்களுக்கு ஷூட்டிங் நடத்த உதவிய குழுவினருக்கும் மாநில அரசாங்த்துக்கும் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘லியோ’. தமிழக ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது.
தற்போது காஷ்மீரில் இந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதையொட்டி படக்குழு அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர். சில நாட்கள் காத்திருப்புக்கு பிறகு, சென்னை ஈ.வி.பி கார்டனில் ஷூட்டிங் துவங்குகிறது. மேலும் ஹைதராபாத் ஆர்.எஃப்.சி-யிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த தங்களுக்கு உதவிய படக்குழு மற்றும் மாநில அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்து, லியோ படக்குழு வீடியோ வெளியிட்டது. அதில் கடுமையான தட்பவெட்ப நிலை, குளிர், மலை போன்ற காலக்கட்டத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.