லியோ படப்பிடிப்பு சென்னையில் துவக்கம்..!!

அண்மையில் காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகளை நிறைவூ செய்த லியோ படக்குழு, சென்னையில் உடனடியாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளனர்.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்தது. விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலி கான், நரேன் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அங்கு ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த வெள்ளி அன்று படக்குழுவினர் சென்னை திரும்பினர். அதை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு சென்னையில் லியோ பட படப்பிடிப்பு துவங்கும் என்கிற தகவல் கூறப்பட்டு வந்தது.

ஆனால் வரும் புதன்கிழமை முதல் பிரசாத் ஸ்டூடியோவில் லியோ பட ஷூட்டிங் துவங்கவுள்ளது. இதுவரை காஷ்மீரில் வெளிப்புறக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ள செட்டுகளில் உட்புற படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரியவந்துள்ளது.

இது முடிந்ததும், உடனடியாக படக்குழு ஹைதராபாத் செல்கின்றனர். அங்கு சில காட்சிகள் படமாக்கப்படுவதுடன், லியோ ஷூட்டிங் நிறைவுக்கு வருகிறது. அங்கு தான் நடிகர் அர்ஜுன் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாம். ஹைதராபாத்தில் விஜய்க்கான பாடல் காட்சிகளும் படமாக்கப்படலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன.