எல்லோரும் தியேட்டர் போலாம் வாங்க.. பார்த்திபன் நடித்த படம் பார்க்க 100 ரூபாய் இருந்தால் போதும்..!
இந்த நிலையில் சற்றுமுன் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் 'டீன்ஸ்’ படத்தை திரையரங்கில் பார்க்க வரும் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையை குறைத்து உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது 'எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, ஆனால் 'டீன்ஸ்’ படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு 100 ரூபாய் மட்டுமே, இதில் எனக்கு நட்டம் இல்லை, வசதி குறைந்தவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அனைத்து திரையரங்களிலும் இந்த படத்திற்கு 100 ரூபாய் மட்டுமே டிக்கெட் வாங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சின்ன பட்ஜெட் படங்களுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ஒரே மாதிரியான டிக்கெட் வாங்கப்படுகிறது என்றும், சின்ன பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையை குறைத்தால் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்த வகையில் முதல் வழிகாட்டியாக பார்த்திபன் தனது படத்திற்கான டிக்கெட் விலையை குறைத்து இருப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.