வைரலாகும் லோகேஷ் கனகராஜ் ட்வீட்!! 

 

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் ‘ருத்ரன்’. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் இப்படத்துக்கான கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பூமி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) வெளியாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் மொத்தம் உலகெங்கும் 1,500 ஸ்கிரீன்களில் திரையிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸின் பரபரப்பான அதிரடியான ஆக்சன் காட்சிகள் மற்றும் லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் என அனைத்து சாரருக்குமான ஜனரஞ்சக அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.