சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்..!!

தமிழில் முன்னணி இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதற்கான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

வீட்டுல விசேஷங்க படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி பெரிதும் நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் ‘வீட்டுல விசேஷம்’. முன்னதாக வெளியான ‘ரன் பேபி ரன்’ படம் பெரியளவில் ஓடவில்லை. அதனால் இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி பெரிதும் நம்பியுள்ளார்.

வேல்ஸ் ஃப்லிம் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கோகுல் இயக்கி வருகிறார், நாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். இந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் படம் தொடர்பான சில சர்பரைஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார். அவருடைய கடைக்கு சில பிரபலங்கள் வந்து ஹேர்கட் செய்துவிட்டு போவதுபோல சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அப்படியொரு வாடிக்கையாளராக நடிகர் ஜீவா அவராகவே படத்தில் நடித்துள்ளார்.

அந்த வரிசையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜியிடம் முடி திருத்திவிட்டு, சில காட்சிகள் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடம் மேலும் 2 முக்கிய பிரபலங்கள் ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூனுக்கு வந்து போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.