அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தங்கலான் பட நடிகர்..!

 
1
1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, லைலா நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சம்பத்ராம்.வல்லரசு, உன்னைக் கொடு என்னை தருவேன், தீனா, தவசி, ரெட், ரமணா, ஆஞ்சனேயா, ஜனா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், செல்லமே, திருப்பாச்சி, ஆதி, ஆள்வார், போக்கிரி, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை கிண்டி அருகே சம்பத் ராம் காரில் சென்றுகொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. பின்னால் வந்த லாரி மோதியதில் இவரின் கார் பின்பக்கம் சுத்தமாக நொறுங்கியுள்ளது. காரில் பயணித்த சம்பத்ராம் சிறு காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.