‘லக்கி பாஸ்கர்’ படத்தில் அதிகாரப்பூர்வ வசூல்..! 

 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் .

இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வரும் நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே ‘லக்கி பாஸ்கர்’.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் வெளியான 8 நாட்களில் உலகளவில் ரூ.74.1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.