மாமன்னன் படத்தின் கதை தெரியுமா..?? டிரெய்லர் சொல்லும் உண்மை இதுதான்..!!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் மாமன்னன் படத்தின் டிரெய்லர் சமூகவலைதளத்தில் வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பை குவித்து வருகிறது.
 
 

கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை புரிந்துகொண்ட படக்குழு ‘மாமன்னன்’ படத்தின் டிரெய்லருக்கான அப்டேட்டை சமூகவலைதளம் வாயிலாக அறிவித்தனர்.

அதன்படி தற்போது படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது. வடிவேலுவின் அழுத்தமான வசனங்களுடன், ஏ.ஆர். ரஹ்மானின் அதிரவைக்கும் பின்னணி இசைக் கொண்டு டிரெய்லர் பயங்கராக உள்ளது. தற்போது இந்த டிரெய்லரை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

<a href=https://youtube.com/embed/xWe03YByWEI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/xWe03YByWEI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

எப்போதும் உண்மைச் சம்பவங்களை தழுவி படம், தனது கற்பனையை சேர்த்து படம் எடுப்பது மாரி செல்வராஜின் பாணி. அந்த வகையில், கடந்த 2008-ம் ஆண்டு சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் வெடித்தது. இந்தியளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக வடிவேலு நடிக்கிறார். ஆதிக்கப் பின்னணிக் கொண்ட அரசியல்வாதியாக ஃபகத் பாசில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சட்டக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வருகிறது.