மாவீரன் படத்தின் டிரெய்லர் & பாடல் வெளியீடு எப்போது தெரியுமா..??

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
 

மண்டேலா படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றவர் மடோன் அஸ்வின். இவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் மாவீர. தமிழில் நேரடியாக தயாராகியுள்ள இப்படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில், சரிதா, யோகி பாபு, குக் வித் கோமாளி மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு பரஷ் ஷங்கர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இதையடுத்து உடனடியாக படத்தின் டிரெய்லர் மற்றும் அனைத்துப் பாடல்களையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 2-ம் தேதி படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

சென்னையில் இருக்கும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இதற்கான விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று படக்குழு அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர். வரும் ஜூலை 14-ம் தேதி மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.