‘பிசாசு-2' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..!

 

பிசாசு திரைப்படத்தின் பாகம் 2 தற்போது ஆண்ட்ரியா மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது இத்திரைப்படமானது சமீபத்தில் வெளியாக இருந்தது இந்நிலையில் ‘பிசாசு-2' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஏனெனில் விநியோக உரிமைக்கான 1.84 கோடி மீதி தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.குறித்த நிலுவையினை செலுத்தும் வரை திரைப்படத்தை வெளியிட முடியாமையினால் திரைப்படக்குழு சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.