தொடைகள் வழியாக பயணிக்கும் விரல்கள்- என்ன சொல்ல வருகிறார் நிமிஷா..??
மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிமிஷா சஜயன். இவருடைய நடிப்பில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘நயட்டு’, ‘மாலிக்’ போன்ற படங்கள் தேசியளவில் கவனமீர்த்தவையாகும். இவர் தற்போது இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவை கடந்த அவர் சமூகவலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தனது ஒவ்வொரு கருத்துகளையும் நகர்வுகளையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார். இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.
அண்மையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ”சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்” என்று நிர்வாணமாக இருக்கும் பெண்ணின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பதிவை நிமிஷா சஜயன் தான் எழுதினாரா? இல்லை யாராவது அவருடைய பக்கத்தை ஹேக் செய்துவிட்டனரா? என்று தெரியவில்லை. ஆனால் இதுவரை இந்த பதிவு தொடர்பாக, அவர் எந்தவிதமான பின்னூட்டமும் அளிகக்வில்லை.