நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா..?? மணிமேகலை சொன்ன பதில் இதுதான்..!!

சமூகவலைதளத்தில் கர்ப்பம் தொடர்பாக ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, டிவி பிரபலம் மணிமேகலை அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மணிமேகலை. நிகழ்ச்சி மிகப்பெரியளவில் பெயர்போனதுக்கு அவருடைய பங்கேற்பும் முக்கியமான காரணமாகும். 

கடந்த 3 சீசன்களாக சிறப்பான பங்களிப்பை வழங்கிய மணிமேகலை, நடப்பு சீசனில் சில எபிசோடுகள் மட்டுமே வந்தார்.  அதை தொடர்ந்து நடப்பு குக் வித் கோமாளி சீசனில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து, தனது சொந்த வேலைகளில் பிஸியாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று மணிமேகலையிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு, அது வெறும் வதந்தி. நான் கர்ப்பமாக கிடையாது. என்னை குறித்து என்ன செய்தியாக இருந்தாலும், அதை நாலு யு ட்யூப் சேனல்கள் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள தேவை இருக்காது. எனக்கு என்ன நடந்தாலும், அதை நானே உங்களிடம் சொல்லுவேன் என்று மணிமேகலை பதிலளித்துள்ளார்.

இதன்மூலம் மணிமேகலை கர்ப்பமாக இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், தற்போது அவர் தனது கணவர் ஹுசைனுடன் இணைந்து திருப்பூரில் ஒரு ரிசார்ட் கட்டி வருகிறார். அதற்கான பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதற்காகவே மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.