புதிய டிவி தொடரில் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பதிலாக முதல் நடிக்க இருந்தது இவரா..??

விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் தொடரில் எஸ். ஏ. சந்திரசேகர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.
 

நடிகை ராதிகா சரத்குமார் தனது ராடன் மீடியாவொர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் தொடர் கிழக்கு. விஜய் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்டு வரும் இந்த தொடரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவர் ரேஷ்மா, வெங்கட், தாரணி, ஆனந்த் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இன்னும் இந்த தொடரின் ஒளிபரப்பு துவங்கவில்லை. எனினும், அவ்வப்போது கிழக்கு வாசல் ப்ரோமோ ஒளிபரப்பாகி வருகிறது. 

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த தொடரில் ஒளிபரப்பு இம்மாத இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த சீரியலில் எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து நடிப்பதாக இருந்தது.

ஆனால் சன் டிவியுடன் இருக்கும் ஒப்பந்தம் காரணமாக, அவர் கிழக்கு வாசல் தொடரில் நடிக்க முடியமல் போய்விட்டது. அவருக்கு பதிலாக தான் தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஹிட் படங்களை இயக்கியுள்ள எஸ். ஏ. சந்திரசேகர் முதன்முதலாக நடிகராக இந்த சீரியலில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.