லோகேஷ் கையால் புதிய காரை பெற்றுக்கொண்ட மாஸ்டர் மகேந்திரன்..!
 

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து முத்திரைப் பதித்த மாஸ்டர் மகேந்திரன் தான் புதியதாக வாங்கிய காரை இயக்குநர் லோகேஷ் கையால் பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 1994-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘நாட்டாமை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அதை தொடர்ந்து பல படங்களில் சிறுவனாக நடித்து வந்த அவர், தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருவார்.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் கமிட்டாகி வருகிறார்.

சொந்தமாக மாருதி சுஸூகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்பில் புதிய ஆடம்பர காரை வாங்கியுள்ளார் மகேந்திரன். அந்த கார் சாவியை இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கொடுத்து பெற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளத்தில் மகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், மாஸ்டர் படத்தின் மூலம் தனித்து அடையாளம் கிடைத்துள்ளது. இதன்மூலம் பட வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. வாழ்க்கையில் நான் வாங்கும் முதல் காரை லோகேஷ் கனகராஜ் பெற வேண்டும் என விரும்பினேன். அதை நடந்துள்ளது. இன்று முதல் என் பயணத்தை தொடங்குகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புதியதாக மாருதி சுஸுகியின் ஆடம்பர காரை வாங்கியுள்ள மாஸ்டர் மகேந்திரனுக்கு ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.