ஒரு வேளை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கூஜாவாகத்தான் இருக்கிறாரோ? ஆட்டத்தை ஆரம்பித்த பயில்வான் 

 

லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

அதோடு நயன் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்.


சமீபத்தில் தான் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ தொடர்பான ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சில சர்ச்சைகளும் எழுந்தது அனைவரும் அறிந்தது. இதை அடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்து இருந்தார். அதில் பிரபுதேவா உடனான காதலை குறித்தும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

இப்படி நயன் பேட்டி தான் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர்களை விட அதிகமாக கான்ட்ரவர்சியாக நயன்தாரா தான் பேசி வருகிறார். இதற்கு முன்பு அவர் பேசவே மாட்டார். ஆனால், இப்ப பேசினால் நிறுத்தவே மாட்டேங்கிறார். நடிகர்களில் சிவகுமார் தான் இப்படி பண்ணுவார். நடிகைகளின் நயன்தாரா செய்கிறார். இவர் என்னவோ 50 வருடத்திற்கு முன்னாடி சினிமாவில் நடிக்க வந்த மாதிரியே பேசுகிறார். நான் சினிமாவில் நடிக்க வந்த போது நிறைய நடிகைகள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்கள்.

இரண்டாம் திருமணம் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. அதை பார்த்து தான் தனக்கும் இரண்டாவது திருமணம் செய்ய எண்ணம் வந்தது என்றும் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்ய இருந்தது எல்லாம் பேசியிருந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை தெரிந்து தானே திருமணம் செய்து கொண்டீர்கள். இதில் தவறு இல்லை என்று எல்லாம் கேட்டிருக்கிறீர்கள். யாராவது எச்சில் இலையில் சாப்பிடுவாங்களா? இந்த காலத்தில் கணவன் சாப்பிட்ட தட்டில் கூட யாரும் சாப்பிடுவது கிடையாது. எச்சிலையில் சாப்பிடுவது மனைவிக்கான . உரிமை ஏற்கனவே கல்யாணம் ஆகி உரிமைகளோடு இருக்கிறவர்களுக்கு சக்காளத்தியா போகணும்னா சரியா வருமா? நீ நடிகை தானே, புதிதாக ஒருவரை பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்.

இப்பதான் விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ணியாச்சு. அப்போதாவது சரியா இருக்கலாம் என்றால் திரும்ப வந்து பேட்டியில் விக்னேஷ் சிவனை ஏன் கல்யாணம் பண்ணேன் என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறாய். என்னை கல்யாணம் பண்ணாமல் இருந்தால் விக்னேஷ் சிவன் பெயர் நன்றாக இருக்கும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். அப்போ விக்னேஷ் சிவன் இத்தனை நாளா கொடுமையை தான் அனுபவித்திருக்கிறாரா? வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல. நடிகைக்கு பின்னாடி ஓடுறவங்களை கூஜானு சொல்லுவோம். ஒருவேளை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கூஜாவாகத்தான் இருக்கிறாரோ? அவங்க ரெண்டு பேரும் எப்படின்னு அவங்க சொன்னா தானே தெரியும் என்று விமர்சித்து பேசி இருக்கிறார்.

<a href=https://youtube.com/embed/hfuPa33qcRI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/hfuPa33qcRI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">