குட் நைட் மணிகண்டனைப் பாராட்டிய அமைச்சர் உதயநிதி..!
Feb 8, 2024, 07:05 IST
‘லவ்வர்’ படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி, மணிகண்டனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் மணிகண்டன்.
“தொலைபேசி மூலம் வாழ்த்தியதற்காக அமைச்சருக்கு நன்றி. நீங்கள் ‘லவ்வர்’ படத்தைப் பார்த்து ரசித்தீர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
“இது போன்ற நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தங்களுடைய பாராட்டுகள் ஊக்கம் அளிக்கும்,” என்று மணிகண்டன் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.