தனது ஸ்டைலில் பக்கா மாஸாக ரிலீஸ் தேதியை அறிவித்த மிர்ச்சி சிவா..!

 

விஜய் சேதுபதியின் கேரியரில்  மிக முக்கியமான படமாக சூது கவ்வும் திரைப்படம் காணப்பட்டது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

சூது கவ்வும் படத்தின் முதலாவது பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இதன் இரண்டாவது பாகம்  ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை சி. வி குமார் தயாரித்துள்ள நிலையில் இயக்குனர் எஸ். கே ஆர்ஜூன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க  உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ரமேஷ்,திலக் கருணாகரன் , கவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், சூது கவ்வும் படத்தின் இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 13ஆம் தேதி சூது கவ்வும் படம் திரையரங்கங்களில் வெளியாக  உள்ளது. விஜய் சேதுபதி முதலாவது பாகத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போல மிர்ச்சி சிவாவும் இந்த படத்தில் ரசிகர்களை கவருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.