மிஸ் யூ திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

 

மிஸ் யூ படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஆஷிகா ரங்கநாத், பால சரவணன், கருணாகரன், மாறன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை செவன் மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார். கேஜி வெங்கடேஷ் அந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க தினேஷ் பொன்ராஜ் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு இருந்தார்.

ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வந்தது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழ்நாட்டை தவிர மற்ற பகுதிகளில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த படம் இன்று (ஜனவரி 10) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.