ரிலீஸுக்கு முன்பு டெலீடட் காட்சிகள் வெளியீடு- மோகன்லால் புது யுக்தி..!!

மோகன்லால் தான் நடித்து இயக்கி வரும் பரோஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டு புதிய ப்ரோமோஷன் யுக்தியை கையாண்டுள்ளார்.
 

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நடித்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தத்தில் இருப்பவர் மலையாள நடிகர் மோகன்லால். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் அவர், தனது நீண்டநாள் ஆசையை தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அது தான் திரைப்பட இயக்கம்.

முதன்முறையாக மோகன்லால் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் ஃபேண்டசி படம் தன பரோஸ். வாஸ்கோடகாமாவின் சொத்துக்களை பாதுகாக்கும் காவலன் தான் பாரோஸ். அந்த கதாபாத்திரத்தை மையப்படுத்திய படம் தான் பாரோஸ்.

மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் இந்த படத்துக்கான கதையை எழுதியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. அதேசமயத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் துவங்கியுள்ளன.

பாரோஸ் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சியை, படக்குழு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியான பிறகு தான் இதுபோன்ற டெலிடட் காட்சிகள் வெளியாகும். ஆனால் ரிலீஸுக்கு முன்பே பாரோஸ் படம் டெலிடட் காட்சிகளை வெளியிட்டுள்ளது, புதிய ப்ரோமோஷன் யுக்தி என்று பலரும் கருத்தி தெரிவித்துள்ளனர்.