குரங்கு பெடல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருவதால் லாபகரமான தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

அந்தவகையில் இவரது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் தான் குரங்கு பெடல் . கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த படத்தை கமல்கண்ணன் இயக்க சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மினிமம் பட்ஜெட் செலவில் இந்த படத்தி தயாரித்துள்ளது .

ஜிப்ரான் இசை அமைக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.