காமெடி படத்தை இயக்கியவர் தான் மூக்குத்தி அம்மன் 2ஐ இயக்க போகிறாராம்..! 

 

மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகமும் உருவாக உள்ளதாகவும் அதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. 

எனினும் இந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகாமல் இருந்தது. அத்துடன் ஆர்ஜே பாலாஜி இதனை இயக்க மாட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தை பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி இயக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் இறுதியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்து 100 கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது.

இவ்வாறான நிலையில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே கலகலப்பு 3 திரைப்படத்தையும் சுந்தர் சி இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த இரு படங்களில் எதை முதலில் இயக்குவார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.