‘நாதஸ்வரம்’ நடிகையின் சோகம்..!

 
திருக்குமரன் இயக்கத்தில் உருவான ‘நாதஸ்வரம்’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த சீரியலில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட பிரபலமானார்கள் என்பதும் தெரிந்தது.  அந்த வகையில் ‘நாதஸ்வரம்’ சீரியலில் காமு என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான பென்ஸி பிரிங்க்ளின் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி உள்ளார். அதில் தன்னுடைய மீடியா வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை, விவாகரத்து உள்ளிட்டவற்றை மனம் திறந்து பேசி உள்ளார்.

தனது அப்பா நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற போது தான் அவருடன் நானும் சென்றேன் என்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறிய பென்ஸி பிரிங்க்ளின், அப்பொழுது எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்றும் அதற்காக நான் நடனமெல்லாம் முறைப்படி கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

வசந்த் டிவியில் தொகுப்பாளினியாகவும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டேன் என்றும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு திருமுருகன் இயக்கத்தில் ’நாதஸ்வரம்’ சீரியலில் எனக்கு காமு என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் அந்த சீரியலில் தான் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு எனக்கு திருமணம் நடந்தது என்றும் பல கனவுகளோடு திருமண வாழ்க்கைக்கு நுழைந்தபோது தான் திருமண வாழ்க்கை என்பது தனக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றமான வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டேன் என்றும் எனக்கு பிறகு இரண்டு தங்கைகள் இருந்ததால் விவாகரத்து செய்யவும் தயங்கிக் கொண்டிருந்த நிலையில் தான் அதன் பிறகு குடும்பத்தில் உள்ளவர்களிடம் புரியும் படி பேசி விவாகரத்து பெற்று விட்டேன் என்றும் தெரிவித்தார்.

திருமணம் ஆகும்போது விவாகரத்துக்கு பெறுவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என்றும் ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் மிகப்பெரிய துரதிஷ்டம் ஏற்படும் என்றும் பெண்கள் கண்டிப்பாக சுயமாக சம்பாதிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் திருமண வாழ்க்கை ஏமாற்றமாக இருந்தாலும் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றேன் என்றும் அவர் கடைசியில் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.